தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனோ தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கை அமல்படுத்து பத்து நாட்கள் ஆகியும் ஒரு நாள் கூட கொரோனோ தொற்று தமிழகத்தில் குறையவில்லை மாறாக கொரோனோ தொற்றில் புதிய உச்சங்கள் தினமும் எட்டி வருகிறது. மாநில அரசு சரிவர ஊரடங்கை கையாள தெரியாமல் மக்களை தன் போக்கில் நடமாட விட்டதே காரணம் என கருதப்படுகிறது. மேலும் இன்னும் சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கருதுகின்றனர்.