வேலை வாங்கி தருவதாக கோடிகளில் பணம் சுருட்டிய வழக்கு - மின்வெட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!

Update: 2021-06-24 07:30 GMT

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 15-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, 2011 - 2016 காலகட்டத்தில், அ.தி.மு.க அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 81 நபர்களிடம் ₹1.62 கோடி மோசடி செய்ததாக சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த சுணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உள் பட நான்குபேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. இதற்கிடையே மோசடி தொடர்பாக மேலும் இரு வழக்குகள், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்துள்ள னர்.

இந்த வழக்கில், குற்றப் பத்திரிகை வழங்குவது தொடர்பாக நீதிமன் றத்தில் ஆஜராகுமாறு ஏற்கெனவே செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.ஆலிசியா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பே ரவை நடைபெற்று வருவதால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதி. ஜூலை 15-ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Similar News