எல்.முருகன் பயோடேட்டாவில் 'கொங்குநாடு' - வயித்தெரிச்சலில் ஒன்றிய உயிரினங்கள்!
மத்திய அமைச்சராக பதவியேற்ற உள்ள எல் முருகன் பயோடேட்டாவில், அவரது மாவட்டத்தை குறிப்பிடுவதற்கு பதில், கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பது 'ஒன்றிய உயிரினங்களின் வயித்தெரிச்சலை கிளப்பியிருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கத்தின் போது தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க தலைவராக இருக்கும் முருகன் மத்திய அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசு புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள பயோடேட்டாவில், முருகன் பெயருக்கு பின்னால் குறிப்பிடப்பட்ட விபரக் குறிப்பு சிலருக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு அமைச்சருக்கும் பின்னாடியும் அவர்களது கல்வித் தகுதி , வயது, எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இடம்பெற்றிருக்கிறது. அதில் முருகன் பெயருக்குப் பின்னால் அவர் வழக்கறிஞராக பணியாற்றியது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தது, அவரது கல்வித் தகுதி வயது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன . ஆனால், மாவட்டம் நாமக்கல் என்பதற்கு பதில் கொங்கு நாடு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடும் போது குதூகலமாக இருந்த சிலருக்கு எல்.முருகன் பெயரின் அடையாளமாக 'கொங்கு நாடு - தமிழ்நாடு' என குறிப்பிடும் போது எரிச்சலாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.