தமிழகமே கொண்டாடிய காமராஜர் பிறந்தநாளை மறந்த ராகுல்காந்தி - வாழ்த்து கூட கூறவில்லை!
தமிழகமே கொண்டாடிய காமராஜ் பிறந்தநாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏனோ மறந்துபோனார்.
நேற்று தமிழகம் முழுவதும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119'வது பிறந்தநாள் விமரிசையாக கட்சி பாகுபாடின்றி கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் 'கிங் மேக்கராக' விளங்கியவர் காமராஜர். நேரு மறைவிற்கு பிறகு இந்திராகாந்தி அம்மையார் காங்கிரஸ் சார்பாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முழுமுதற்காரணமாக விளங்கியவர் காமராஜர் மட்டுமே! தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்திற்கு பிறகு காங்கிரஸாரால் ஆட்சியை பிடிக்க இயலவில்லை, இன்றுவரை பலர் காமராஜர் ஆட்சியை தருவோம் என தேர்தல் ஆணையம் வாக்குறுதிகள் தருவதை பார்க்க இயலும்.
இப்படியான பல சிறப்புகள் வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் பாரம்பர்யமிக்க தலைவரும், தமிழகத்தில் வரலாறு போற்றிய முதல்வருமான காமராஜர் பிறந்தநாளுக்கு தனது சமூக வலைதள பதிவுகளில் கூட ராகுல்காந்தி பெயரளவிற்கு வாழ்த்துக்களோ, சம்பிரதாய பதிவுகளோ இடவில்லை.
தமிழகம் முழுவதும் மற்ற நாட்களில் எல்லாம் சோம்பலாக சுற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூட நேற்று தமிழகத்தின் அனைத்து காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் எதிர்கால பிரதமர் என ராகுல்காந்தியின் பெயரை கூவி வரும் நிலையில் காமராஜர் பிறந்தநாளன்று கூட ராகுல்காந்தி மறந்தது அரசியலில் ராகுல்காந்தியில் முதிர்ச்சியற்ற குழந்தைதன்மையை காட்டுகிறது.