நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ'வை காணவில்லை என காங்கிரஸாரே தேடும் அவலநிலை
காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ரூபி மனோகரன் தொகுதிக்குள் வரவில்லை என்பதால் அவரைக் காணவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவரே சுவரில் எழுதி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியடைந்தவர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பல உட்கட்சி பூசல்களால் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் உண்டு.
இந்நிலையில், நாங்குநேரி பேருந்து நிலையத்தில் உள்ள சுவரில் அவரைக் காணவில்லை என எழுதப்பட்டுள்ளது. அதில், 'வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லைத் தவறமாட்டார், ரூபி மனோகரன், அவரை காணவில்லை. கண்டுபிடித்துத் தருபவருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்' என்று எழுதப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.