உத்திர பிரதேசத்தில் போட்டியிட வேட்பாளர் கிடைக்காமல் அல்லாடும் காங்கிரஸ் கட்சி - பிரியங்கா காந்தி "ஷாக்"!

Update: 2021-11-21 03:29 GMT

உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 403 எம்.எல்.ஏ-க்களை கொண்ட உத்திர பிரதேச சட்டசபையில் தற்போது பா.ஜ.க 320 எம்.எல்.ஏ-க்களை பெற்று அசூர பலத்தில் ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

1985-ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி தற்போது வரை அங்கு மீள முடியவில்லை. 2007-ஆம் ஆண்டு உ.பி சட்டசபை தேர்தலில் 22 இடங்கள், 2012-ஆம் ஆண்டு உ.பி சட்டசபை தேர்தலில் 28 இடங்கள், 2017-ஆம் ஆண்டு உ.பி சட்டசபை தேர்தலில் 7 இடங்கள் என கட்சி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விட்டது.

அதேபோல, லோக் சபா தேர்தலிலும் உத்திர பிரதேசத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காங்கிரஸ் கட்சி கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 80-ல் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்தது, குறிப்பாக நேரு-காந்தி குடும்பத்தின் குடும்பத்தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு விண்ணப்பங்களை பெறும் பணி காங்கிரஸ் கட்சியில் துவங்கியது, பெரிதாக யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா காந்தி விண்ணப்பங்களை பெறும் காலக்கெடுவை நீட்டித்தார். நீட்டித்த பிறகும் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. வேறுவழியின்றி பெண்களுக்கு 40 சதவீதம் போட்டியிட இடம் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

எந்த அறிவிப்புகளும் தற்போது பலன் கொடுக்காமல், 403 இடங்களில் தற்போது போட்டியிட வேட்பாளர்கள் கிடைப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர்.

Tags:    

Similar News