தமிழக நகராட்சி பணி நியமன முறைகேடு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!!

By :  G Pradeep
Update: 2026-01-26 14:43 GMT

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்புவதில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.


இது தொடர்பாக மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்துரை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.


இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News