சனாதன ஒழிப்பு விவகாரம்!! உதயநிதி ஸ்டாலினை நோக்கி பா.ஜ.க-வின் கண்டனம்!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு விவகாரத்தில் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியுள்ளார். உதயநிதியின் கருத்து இனப்படுகொலைக்கான அழைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமித் மால்வியா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஷேசாத் பூனாவாலா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் அமித் மால்வியாவுக்கு எதிரான தி.மு.க-வின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மட்டுமல்லாமல், இந்தக் கருத்து தி.மு.க-வின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மரபணுவின் பின்னணியில் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஷேசாத் பூனாவாலா கூறியுள்ளார்.