அதிகார மமதையினால் விமர்சனம் செய்பவர்களை கைது செய்யும் தி.மு.க, பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜ.க. துணை நிற்கும்! - அண்ணாமலை ட்வீட்!

தன்னுடைய அதிகார மமதையினால் விமர்சனம் செய்பவர்களை திமுக அரசு விலங்கு பூட்டி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2021-12-10 09:35 GMT

தன்னுடைய அதிகார மமதையினால் விமர்சனம் செய்பவர்களை திமுக அரசு விலங்கு பூட்டி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் நேற்று பிரபல யூடியூபர் மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவனை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் இறந்தார் என்ற வீடியோவை பதிவிட்டார். அதற்காக அவரை கைது செய்தாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தன்னுடைய அதிகார மமதையினால் அறிவாலயம் (திமுக அரசை) விமர்சனம் செய்பவர்களுக்கு விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மற்றும் பிற தேசியவாதிகளுக்கு சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளை தமிழக பாஜக செய்து வருகிறது.

சட்ட உத்தரவாத கருத்துச் சுதந்திரத்தை கடுமையாக மீறி பழிவாங்க திரு.மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க பாஜக போராடும். அனைவருக்கும் சட்ட மற்றும் இதர உதவிகளையும் பாஜக கட்சி முன்நின்று செய்யும். இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News