காஞ்சிபுரத்தில் சாது, சந்நியாசி சுவாமிகளுடன் பிரதமர் மோடி நிகழ்ச்சியை பார்த்த அண்ணாமலை!

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்த பின்னர் காசியில் பிரதமர் மோடி விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன் நேரடி நிகழ்ச்சிகளை பாஜகவினர் இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களில் நேரடி நிகழ்ச்சிகளாக பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2021-12-13 12:48 GMT

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்த பின்னர் காசியில் பிரதமர் மோடி விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன் நேரடி நிகழ்ச்சிகளை பாஜகவினர் இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களில் நேரடி நிகழ்ச்சிகளாக பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Full View

அதே போன்று தமிழகத்திலும் பல கோயில்களில் பிரதமர் மோடி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்தனர். 


அதன்படி மாநிலத் தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் சாமியை தரிசனம் செய்த பின்னர், உத்தரபிரதேச மாநிலம், காசியில் புனரமைக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததை பொதுமக்களுடன், கட்சி நிர்வாகிகளுடன், சாது, சந்நியாசி சுவாமிகளுடன் அமர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்த்தார்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News