நீட் கட்டாயம் தேவை: நீலகிரி மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேச்சு!
நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி நேற்று (ஜனவரி 12) துவக்கி வைத்தார். இந்த திறப்பு விழாவில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வானதி சீனிவாசன், சுகாதாரத்துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. அதில் அடுத்த மைல்கல்லாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
Joined the inauguration of 11 new medical colleges in Tamil Nadu and 1 new campus of Central institute of classical Tamil, Chennai by Hon'ble PM Shri @narendramodi ji. This is historic occasion as Tamil Nadu is only state where 11 colleges have been inaugurated in one go. pic.twitter.com/EliFTkguN1
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 12, 2022
மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு மருத்துவக்கல்லூரி உள்ளது. நாட்டிலேயே 12 சதவீத மருத்துவ இடங்கள் இங்கு உள்ளது. ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்களும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல தரமான மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை. தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடவே நீட் தேர்வுக்கு திமுக அரசு விலக்கு கேட்கிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 6000 இடங்களில் இருந்து 10000 மருத்துவ இடங்களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Hindu Tamil
Image Courtesy: Twiter