கோவை மக்கள் தேசியத்தின் பக்கம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி @BJP4TamilNadu வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மாநில தலைவர்
— Vanathi Srinivasan (@VanathiBJP) February 7, 2022
திரு.@annamalai_k தலைமையில்.
வெற்றியை நிச்சயம் கொண்டு வரும் ஊக்கம்....உற்சாகம்...
அத்தனை பேரிடமும்.
@JPNadda @blsanthosh pic.twitter.com/lFJr1hWzIq
இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாலை பேசியதாவது: கமுதி பேரூராட்சி 14வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி சத்யஜோதி ராஜா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதன் மூலம் பாஜகவிற்கு தமிழக மக்கள் முதல் வெற்றியை அளித்திருக்கின்றனர் என்றார். மேலும், கோவை மக்கள் தேசியத்தின் பக்கம் உள்ளனர். மேலும், நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது அல்ல எனவும் குறிப்பிட்டார்.
Source: Polimer
Image Courtesy: Twiter