இலங்கை தமிழர்கள் அண்ணாமலைக்கு கொடுத்த வரவேற்பு - தமிழகத்தில் யாருக்கு எச்சரிக்கை?
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தமிழர்கள் அளித்த வரவேற்பை பார்த்து தி.மு.க.வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இலங்கைக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழர்களின் கோரிக்¬யை ஏற்று பா.ஜ.க., தமிழக தலைவர் அண்ணாமலை அந்நாட்டுக்கு பயணித்தார். அதன்படி அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும், உழைப்பாளர் தின விழாவில் பங்கேற்பதற்காக கடந்த ஏப்ரல் 30ம் தேதி இலங்கை சென்றார்.
அதன்படி கொழும்பு விமான நிலையத்தில் இருந்து நுவரெலியா சென்றார் அண்ணாமலை. அங்கிருந்து ஹனுமன், சீதா மாதா கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். இக்கோயிலை இலங்கை வாழ் தமிழர்கள் நிர்வகித்து வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் பெயர்களில் அர்ச்சதனை செய்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உழைப்பாளர் தினவிழாவிலும் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும், இந்திய வம்சாவளியினரான, மலையக தமிழர்கள் திரண்டிருந்த கூட்டத்தின் நடுவில் அண்ணாமலையை அறிமுகப்படுத்தினார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான். மேலும் இந்திய பிரதமர் மோடிதான் அண்ணாமலை அனுப்பினார் என கூறினார். அதனை கேள்விப்பட்ட தமிழர்கள் அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசியதாவது: ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனை காத்தது போன்று பிரதமர் மோடி இலங்கையை காப்பாற்றி வருகிறார் என்றார். இந்தியா எப்போதும் இலங்கையை கைவிடாது. இந்நிலையில், இலங்கை தமிழர்கள் அண்ணாமலைக்கு அளித்த வரவேற்பை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலினை இலங்கைக்கு சென்று வருவதற்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy: Twiter