"தருமபுரம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் நான் இருப்பேன்!" - களத்தில் இறங்கிய ஹெச் ராஜா!
தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் பல்லக்கு வீதி உலா நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
"தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல், இந்து மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது" என்று இந்து மத இயக்கங்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் பல்லக்கு வீதியுலா நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ.க தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் வரிசையில் மூத்த பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா :
இந்து மதத்தைப் பொறுத்தவரை குருமகா ஸன்னிதானங்கள், நமக்கு ஆண்டவனை அடைவதற்கு வழிகாட்டியாக இருப்பவர்கள். ஆகையால் இந்து மதத்தில் குருமகாஸன்னிதானங்களை ஆண்டவனுக்கு இணையாக பல்லக்கில் தூக்கிச் சென்று பட்டினப்பிரவேசம் செய்வது வழக்கம். இந்த மத உரிமையில் தலையிட யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை. ஏனென்றால் அரசியல் சட்டப்பிரிவு 25 26ல் ஒவ்வொரு மத பிரிவினர்களும் அவர்களுடைய மத சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதற்கு உரிமைகள் இருக்கின்றன. ஆகையால் தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசிக்கும்நிகழ்வில், பல்லக்கில் தூக்கிச் செல்லும்போது யாரும் தடை விதித்தாலும் அந்தத் தடையை மீறி இந்துமக்கள் நிச்சயமாக அவர்களது மதக் கடமைகளை செய்து முடிப்பார்கள்.பல்லக்குத் தூக்கும் பொழுது எச் ராஜா அந்த ஸ்பாட்டில் இருப்பார்"
என்று பேசியுள்ளார்.