ரேஷன் அரிசி கடத்துவதை பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் கூறுவது தி.மு.க.வுக்கு வெட்கக்கேடானது: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து அதிகளவு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வெளிமாநிலங்களில் விற்பனை செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் கூறுகின்றது. இதனையடுத்து ஆந்திராவில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். தற்போது அந்த கடிதம் பேசும்பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022
வெட்கக் கேடானது. pic.twitter.com/m3ztxzS7zh
இது குறித்து ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். வாணியம்பாடி தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. 16 மாதத்தில் 13 வழக்குகள் தனது குப்பம் தொகுதியில் பதிவாகியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகனப்படுத்தி கொள்வது வெட்கக் கேடானது. இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Times Of India