பேரூராட்சி இடத்தை ஆக்கிமித்து, தி.மு.க. அலுவலகம் திறப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Update: 2022-06-04 02:50 GMT

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சின்னாளப்பட்டி பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பல தனியார் ஆக்கிரமிப்பும் இடம் பெற்றுள்ளது. அதன்படி 17வது வார்டு கருணாநிதி காலனியில் பூங்காவிற்கான இடத்தில் தி.மு.க.வினர் கொட்டகை அமைத்துள்ளனர். இதன் பின்னர் நேற்று (ஜூன் 3) கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. அலுவலகத்தில் கட்சிக்கொடியேற்றி திறப்பு விழா நடத்தியுள்ளனர்.

இது குறித்து பா.ஜ.க. மண்டல தலைவர் எஸ்.விக்கேஷ் கூறுகையில், அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். அதே போன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும், தற்போது 17வது வார்டில் பூங்காவுக்கு சொந்தமான இடத்தை கம்பி வேலியை அகற்றி அதனை ஆக்கிரமித்து தி.மு.க. அலுவலகம் கட்டி திறந்துள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்று அரசு நிலங்களை தி.மு.க.வினரே ஆக்கிரமித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News