மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி!! தோல்வியை சந்தித்த உத்தவ் தாக்கரே!!

By :  G Pradeep
Update: 2026-01-18 10:16 GMT

மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 87 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 29 இடங்களிலும் வெற்றி பெற்றது.


உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 73 இடங்களில் முன்னிலையில் இருந்தது. மும்பை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவின் கையை விட்டு சென்று இருக்கிறது.


பா.ஜ.கவின் கனவும் நிறைவேறி இருக்கிறது. இத்தேர்தலில் நவநிர்மாண் சேனா எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறவில்லை.


காங்கிரஸ் கட்சியும் வெறும் 7 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்தது.

Tags:    

Similar News