விழுப்புரம் அருகே உள்ள டி.எடையார் என்ற கிராமத்திற்கு சென்ற அமைச்சர் பொன்முடியை கிராம மக்கள் நுழைய விடாமல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், டி.எடையார் என்ற கிராமத்தில் அருண் என்பவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த 4 பேரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை திருவெண்ணை நல்லூர் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை கைது செய்யாததை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதில் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொந்த கிராமத்தில் கொலை செய்யப்பட்ட மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அவரை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு வழியாக சமாதானம் ஆன பின்னர் பொன்முடி மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar