தேர்தலில் வெற்றி பெற சங்கர மடத்திற்கு ஆசி வாங்க சென்ற தி.மு.க. பிரமுகர் !

Update: 2021-03-08 01:30 GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. தங்களை ஒரு இந்து ஆதரவு கட்சியாக வெளிக்காட்டி வந்த நிலையில் தற்போது கும்பகோணத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியாரிடம் வாழ்த்து பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கும்பகோணத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சாக்கோட்டை க.அன்பழகன். இவர் 2011 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். இவர் தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் கும்பகோணத்தில் காஞ்சி சங்கரமடத்தில் தங்கி பூஜைகளை செய்து காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து இந்த தேர்தலிலும் தான் வெற்றி பெற வேண்டும் என்று சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அப்போது கொரோனா காலகட்டத்தில் மக்களுக்காக என்ன எல்லாம் செய்தார் என்று சாமிகளிடம் விளக்கிக் கூறினார்.

சுயமரியாதை இயக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட அன்பழகன் ஏற்கனவே ஒரு முறை கும்பகோணம் சங்கர மடத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். தற்போது தேர்தல் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரை தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிராமணர்கள் அதிகமாக வசித்துவரும் கும்பகோணத்தில் பிராமணர்களின் வாக்குகளை பெறுவதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே பலமுறை இந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்துக்களில் வாக்குகளை இம்முறை இழக்க நேரிடும் என்பதற்காக சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News