நடைமுறையில் இருக்கும் திட்டத்தை தொலைநோக்குத் திட்டம் என்று அறிவித்த ஸ்டாலின்! நெட்டிசன்கள் கலாய்!

Update: 2021-03-08 10:29 GMT

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் முறை ஒழிக்கப்படும் என்றும் அது ஒரு தொலைநோக்கு திட்டம் என்று அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் 2020ஆம் ஆண்டிலிருந்து ரோபோக்களை கொண்டு மனித கழிவுகளை அகற்றவும் முறையை அரசு பின்பற்றி வருவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொலைநோக்கு திட்டங்கள் என்ற பெயரில் சில திட்டங்களை அறிவித்தார். அதில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை மாற்றப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே மனித கழிவுகளை ரோபோ மூலம் அள்ளும் முறை பயன்பாட்டில் இருந்து வருவதும் அது கூட தெரியாமல் தொலைநோக்கு திட்டம் என்று ஏற்கனவே இருக்கும் முறையை மீண்டும் செயல்படுத்த போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியது.



கடந்த 2020-ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் சார்பாக வடிவமைக்கப்பட்ட ₹ 2.5 கோடி மதிப்புடைய ஐந்து ரோபோக்களை கோவை மாநகராட்சியிடம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒப்படைத்தார். அதேபோல் விருதுநகர், கடலூர்,மயிலாடுதுறை,ராமநாதபுரம்,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ரோபோவும் தேனி உட்பட 11 மாவட்டங்களில் ரோபோ வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது.

இந்த செய்திகள் எதுவும் தெரியாமல் தொலைநோக்குத் திட்டம் என்று ஸ்டாலின் மேடைகளில் பேசி வருகிறார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நன்றி : News J

Similar News