சிற்றுண்டிக்காக அடித்துக்கொண்ட தி.மு.க. தொண்டர்கள் - சிவகாசியில் பரபரப்பு!

Update: 2021-03-16 10:57 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் சிற்றுண்டிக்காக முண்டியடித்த உடன்பிறப்புகளால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக அசோகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்திற்காக தேர்தல் பணிமலை சிவகாசியில் அமைக்கப்பட்டது. இங்கு ஆலோசனை கூட்டம் நடத்திய தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு சிற்றுண்டிக்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு இருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நகைத்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே இருக்கும் பொது மக்களை அழைத்துச் சென்று இதுபோன்று ஆலோசனை கூட்டம் என்று கூறிக்கொண்டு அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அனுப்பிவைக்கும் அவலங்கள் நடந்து வருகிறது. மேலும் சில இடங்களில் இது போன்று சிற்றுண்டி மற்றும் பிரியாணிக்காக தொண்டர்கள் அடித்துக்கொள்ளும் சம்பவமும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்று தேர்தல் கூட்டங்களில் சிற்றுண்டிக்காக அடித்துக்கொள்ளும் அடிமட்ட தொண்டர்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களை நினைத்துப்பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். நீங்கள் என்ன தான் தொண்டர்களை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும் தொண்டர்கள் இறுதிவரை தொண்டர்களாகவே இருக்கும் நிலைதான் ஏற்படும் என்று திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலை குறிப்பிட்டு அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Similar News