தி.மு.க. வைத்த டிஜிட்டல் கவுண்டவுனின் தற்போதைய நிலை - பார்த்துட்டு சிரிக்காதீங்க.!
இன்னும் 48 நாட்களில் உதய சூரியன் உதிக்க போதிக்கிறது என்று அறிவாலயத்தில் தி.மு.க.வினால் வைக்கப்பட்ட டிஜிட்டல் கவுண்டவுன் முதல்நாளிலேயே செயல்படாமல் போனது மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டு தி.மு.க. பல்வேறு கேலிக்கூத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக தான் முதலமைச்சர் ஆகிவிட்டதாக நினைத்துக்கொண்டு ஊர்ஊராக சென்று மக்களிடம் மனுவை பெற்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள குறைகளை தீர்த்து வைப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவிப்பது, எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் என்று கூறுவது போன்ற எண்ணற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அவர் பெற்ற மனுவின் முக்கால் பங்கு அவரது கட்சி நிர்வாகிகளை பற்றிய மக்கள் அளித்த புகார்களே ஆகும். மாடு காணாமல் போய்விட்டது என்று அளித்த மனுவில் உங்களது கணவர் விரைவில் கிடைத்து விடுவார் என்று பதிலளித்த ஸ்டாலினை கண்டு தமிழக மக்களே நகைத்த சம்பவமும் அரங்கேறியது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் தேதி அறிவித்த பிறகு தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டு இன்னும் 48 நாட்களில் உதய சூரியன் உதிக்க போகிறது என்று அண்ணா அறிவாலயத்தில் டிஜிட்டல் கவுண்டவுன் வைக்கப்பட்டது.
ஆனால் வைத்து 24 மணி நேரத்துக்குளாகவே அந்த டிஜிட்டல் பேனர் வேலை செய்யாமல் நின்றுவிட்டது. இதனால் ஒரு டிஜிட்டல் கவுண்டவுன் பேனர் கூட சரியாக வடிவமைத்து வைக்க தெரியாதவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு எப்படி தனது ஆட்சி கட்டில் கனவு பலிக்க போகிறதோ என்று ஸ்டாலின் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் கவுண்டவுன் தி.மு.க.வின் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.