மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி தி.மு.க.-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Update: 2021-03-21 05:37 GMT

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தி.மு.க.விற்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் குடும்ப ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் அ.தி.மு.க. நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களைப் பற்றி விளக்கிக் கூறினார்.

தி.மு.க.வின் தேர்தல் தோல்வி உறுதியாகிவிட்டது என்றும் அதனால் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மக்கள் தெளிவாக இருப்பதால் ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தான் தி.மு.க.விற்கு கடைசித் தேர்தல் என்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் மக்கள் அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்ற கட்சி தி.மு.க. என்று மக்கள் கூறிவரும் நிலையில் தற்போது தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் பல வாரிசு வேட்பாளர்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் மக்களோடு மக்களாக இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. என்றும் தி.மு.க. போல் மக்கள் பிரச்சினையில் தூங்கிக்கொண்டு இல்லாமல் விழிப்புடன் இருந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி தி.மு.க. என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News