அரவக்குறிச்சி பள்ளப்பட்டி கிராமத்தில் பா.ஜ.க. நுழையும் - அண்ணாமலை அதிரடி!

Update: 2021-03-22 06:14 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருக்கும் பள்ளப்பட்டி கிராமத்திற்குள் பா.ஜ.க. நுழையும் என்றும் எந்த ஜமாத்திடமும் நாங்கள் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவருடைய வெற்றி உறுதியாகிய நிலையில் தற்போது பள்ளப்பட்டி என்னும் கிராமத்திற்குள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை வாக்கு சேகரிக்க உள்ளே விட மாட்டோம் என்று ஜமாத் தெரிவித்ததற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளப்பட்டி இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமம் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இருக்கும் ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட ஒருவரை உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளபட்டி கிராமத்தில் இருக்கும் ஜமாத் அமைப்பினர் பா.ஜ.க. வேட்பாளரான அண்ணாமலையை பள்ளப்பட்டி கிராமத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்ட போது அங்கிருந்த முஸ்லிம் பெண்கள் பர்தா அணியவில்லை என்று ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை 8 பேர் ஜமாத்தில் அமர்ந்து கொண்டு நாங்கள் தான் இஸ்லாமியத்திற்கு எல்லாமே என்று தெரிவிக்க முடியாது.

'ஜமாத்தின் இஸ்லாமியத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் தன்னுடன் இஸ்லாமியத்தை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றால் அப்போது கூறலாம் யாருக்கு இஸ்லாமியத்தை பற்றி அதிகம் தெரிகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து தற்போது பா.ஜ.க ஆட்சி வரை இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சி அதிகம் நல்லது செய்துள்ளது, இஸ்லாமிய சகோதரிகளுக்கு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது யார்,இஸ்லாமியர்களுக்காக அதிகம் நிதி ஒதுக்கியது யார்,

இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் பள்ளியில் யார் அதிக உதவித்தொகை கொடுத்தார்கள் என்று பொது மேடையில் விவாதிக்க தயார் என்று சிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வை சேர்ந்த ஜமாத்து உறுப்பினர்கள் தாங்கள் தான் இஸ்லாமியருக்கு அனைத்து நன்மையும் செய்வதாக மக்களை ஏமாற்றி கொண்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் வெளிப்படையாக ஜமாத் ஒரு தி.மு.க.வின் விரிவாக்கம் என்று தெரிவித்து விடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பள்ளபட்டி கிராமத்தில் தி.மு.க.வை விட பா.ஜ.க அதிக வாக்குகளை பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சியில் அண்ணாமலை வெற்றி வாய்ப்பு உறுதியாகிய நிலையில் தற்போது அதனை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் வருங்காலத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் அவர்களுக்கு அண்ணாமலையின் வெற்றி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Similar News