"சூனியம் வச்சுருக்கேன் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க இல்லைன்னா உடம்பு சரியில்லாம் போய்டும்" என வாக்காளர்களை மிரட்டும் தி.மு.க வேட்பாளர்!
மக்களை கவர அரசியல்வாதிகளும், வேட்பாளர்களும் விதவிதமான வாக்குறுதிகள், வித்தியாசமான பிரச்சார முறைகள், புது வியூகமான பிரச்சார வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். ஆனால் கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் "பில்லி சூன்யம் வைத்துள்ளேன் எனக்கு ஓட்டு போடலைன்னா உடல்நிலை சரியில்லாமல் போகும்" என வாக்காளர்களை மிரட்டி வாக்கு சேகரித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தி.மு.க வேட்பாளர் ஐயப்பன், "கடலூர் மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளேன். தி.மு.க'வுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். விருப்பப்பட்டு யார் பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள். ஆனால், உதயசூரியனுக்கு வாக்களித்துவிட்டு அதனை செலவு செய்யுங்கள்'' என அவர் பிரச்சாரம் செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2011'ம் ஆண்டு கடலூர் மாவட்ட உட்கட்சி அரசியலால் வெறுப்படைந்து தி.மு.க'விலிருந்து விலகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெரும் ஆதரவாளர் கூட்டத்துடன் சந்தித்து அ.தி.மு.க'வில் இணைந்து பின் ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு தி.மு.க தாவியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.