"வீடியோ எடுத்த கையை எடுத்துடுவேன்" ஊடகவியலாளரை மிரட்டி தேர்தல் நேர வன்முறை வெறியாட்டத்தில் தி.மு.க!
தி.மு.க கடலூர் வேட்பாளர் ஐயப்பன் பணப்பட்டுவாடா செய்ததை படம் எடுத்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளருக்கு தி.மு.கவினர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிர் பயத்தில் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
நேற்று கடலூர் பகுதியில் தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் தேர்தல் பிரச்சாரத்தின் போது பணப்பட்டுவாடா செய்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த பாலிமர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் இளையராஜா என்பவர் அந்த சம்பவத்தை படம் எடுக்க முயன்றுள்ளார். உடனே கோபமடைந்த தி.மு.கவினர் எங்களையே படம் எடுக்கிறாயா என ஒளிப்பதிவாளர் இளையராஜாவை சராமரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை அங்கிருந்து தூக்கி சென்று நவநீதம் நகரிலுள்ள தி.மு.க பிரமுகர் வீட்டில் வைத்து அடி வெளுத்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோவை அழிக்க வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அடிவாங்கி மிகவும் மள உளைச்சலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மாவட்ட துணை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "வீடியோ எடுத்த கையை எடுத்துவிடுவேன்" என மிரட்டல் விடுத்ததாக தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் மற்றும் அவரின் 15 ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறை விசாரித்து வருகிறது.