நாகர்கோவிலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எம்.ஆர்.காந்தி - முதல் தலைமுறை வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு!

Update: 2021-04-03 13:52 GMT

நாகர்கோவில் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி இன்று முதல்தலைமுறை வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடுபவர் எம்.ஆர்.காந்தி. எளிமையின் சிகரமாக திகழும் இவர் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தன்னை வேட்பாளராக அறிவித்த பிறகு அந்த பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் மதிய உணவு அருந்தினார்.இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி முதல் தலைமுறை வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவர்செல்லும் இடமெல்லாம் நாகர்கோவில் தொகுதி வேட்பாளர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்திலும் முன்னிலை வகிக்கும் நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவராகவும் எளிதில் அணுகக்கூடியராகவும் இருப்பதுதான் தனிச்சிறப்பு.


பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தந்த பிரச்சாரத்தின் போது எம்.ஆர்.காந்தியின் தோளில் தட்டி தட்டிக் கொடுத்து வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகிய எம்.ஆர்.காந்தியை மக்கள் கண்டிப்பாக வெற்றி பெற செய்வார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News