பல்லடம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருக்கு கொரோனோ - அடுத்தடுத்து கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் வேட்பாளர்கள்!
தமிகத்தில் அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அடுத்தடுத்து வேட்பாளர்களுக்கு கொரோனோ ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருக்கு கொரோனா நோய்த்தொற்று கடந்த சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், போட்டியிட்டார். இவர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கடந்த 2 நாள்காளக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பா.ஜ.க'வின் அண்ணாமலை, தி.மு.க'வின் துரைமுருகன், ஜெ.கருணாநிதியின் ஆகியோர் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.