ஊழல் என்றாலே தி.மு.க என்னும் அளவுக்கு பெயரெடுத்த கட்சி தி.மு.க. தி.மு.க.வினர் எந்த அளவுக்கு கொள்ளையடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்பது அவர்களது சொத்து மதிப்பைப் பார்த்தாலே தெரியும்
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் காய்ந்து போயிருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மணல் திருட்டு இவற்றின் மூலம் சொத்து சேர்த்து சுகபோகமாக வாழ்பவர்கள் தி.மு.க. உடன் பிறப்புகள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதை உறுதிப்படுத்தும் விதமாக சில முக்கிய தி.மு.க. தலைவர்களின் வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் அமைந்துள்ளன.
உதாரணமாக நாகர்கோயில் தொகுதியில் களம் காணும் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு 104% சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்தான் நாகர்கோவிலில் சொத்தாக மக்களால் மதிக்கப்படும் எளிமையான எம்.ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போதே தனது சொத்து மதிப்பை 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறார்.நிலஅபகரிப்பு, செம்மண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய திருக்கோயிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்முடி தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய சொத்து மதிப்பு 152 சதவீதம் அதிகரித்துள்ளது.