பெட்ரோல் 5 ரூபாய், டீசல் 4 ரூபாய் விலை குறைப்பு என்ற தி.மு.க கூறிய வாக்குறுதியின் நிலை என்ன?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மற்றும் தி.மு.க கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினர். தேர்தர் முடிவுகள் தி.மு.க'விற்கு சாதகமாக வந்த நிலையில் தி.மு.க ஆட்சி பீடத்தை பிடித்து அதன் கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வரானார்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் 3 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். கொரோனோ நிவாரண தொகையாக ரேசன் அட்டைக்கு 4000 ரூபாயும், நகரப்பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயண அனுமதியும், ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பும் என 3 திட்டங்களும் மக்கள் நேரடி பயனடையும் வகையில் இருந்தன.
தி.மு.க'வின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் பெட்ரோல்'க்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதி பற்றி தி.மு.க'வின் முதல்வர் இதுவரை ஏதும் சொல்லவில்லை என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மளிகை, பால் போன்ற அத்தியாவசிய பொருள்களும், மேலும் கட்டுமானம் பொருள்கள், ஆட்டோ, பேருந்து போன்றவைகளின் கட்டணங்களும் பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தே அமைகின்றன.
இந்த நிலையில் தி.மு.க கையெழுத்திட்ட 3 திட்டங்களும் முக்கியமானதுதான் ஆனால் மக்கள் தினசரி செலவீனங்களை நிர்ணயிக்கும் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க வாக்குறுதியில் கூறியது போல் ஏனு இன்னும் குறைக்கவில்லை என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது.