பிராமணர்கள் மீது அவதூறு கூறி வாக்கு சேகரிக்கும் திமுக IT பிரிவு தலைவர்!

Update: 2021-04-04 08:00 GMT

சமீபத்தில் திமுக உறுப்பினர் Dr P தியாகராஜன் வெளியிட்டிருந்த ட்விட்டில், அவர் பிராமணர்களை முழுமையாக அவதூறு செய்துள்ளதாக தெரிகின்றது. இந்த ட்விட்கள் அனைத்தும் சமீபத்திய சத்குரு ஜாக்கி வாசுதேவ் அவரின் #FreeTNTemples அழைப்புக்குப் பதிலளிப்பதாகத் தெரிகின்றது.


தியாகராஜன் அவரது ட்விட்டில்."யார் கோவில்களைப் பராமரிப்பது என்பது முக்கியம் அல்லது பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களில் யார் கோவில்களை நிர்வகிப்பது என்பது முக்கியமா? ஆயிரம் ஆண்டுகளாகச் சாதியை கடைப்பிடித்து, ஊழல் செய்து வரும் எங்கள் "நிபுணர்கள்" முன்னிலையில் கோவில்களைப் பராமரிக்க இந்த விஷசக்தி யார் ?", என்று கூறப்பட்டிருந்தது.

அவரது ட்விட்டில் ஒரு விளக்கப்படம் பொருத்தப்பட்டு, பிராமண சமூகங்கள் கோவில்களைத் தனி உரிமை கொண்டாட முயற்சிக்கிறது என்ற கூற்றுடன், "இந்து என்ற சொல் வருவதற்கு முன்பே இருந்த கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் எவ்வாறு உரிமை கோர முடியும் ?", "தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி செய்யவில்லை என்பதற்காக பா.ஜ.க இதனைச் செய்ய முயற்சிக்கிறதா ?, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில்கள் பா.ஜ.க நிர்வாகிகளால் பராமரிக்கப்படுகின்றது என்றால் உண்மையில் அது இந்து சமூகத்துக்கு அவமரியாதை அல்லவா ?", கோவில்களைக் கட்டுப்படுத்த விருப்பமும் அந்த நிபுணர்கள் அனைவரும் சமூகத்தில் இன்னும் வர்ணா அமைப்பிலும் மற்றும் உயர் சாதி குறிச் சொல்லுடன் இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் என் நமது கோவில்களை ஆக்கிரமிக்க வேண்டும் ?", மற்றும் "இந்த அழைப்பு அவர்களின் சாதிவாதத்தையும், தற்போதைய நவீன காலங்களிலும் அவர்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதை விரும்புகிறார்கள்," என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது என்பதும் அவரது ட்விட்டில் கூறப்பட்டிருந்தது.




தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், திமுக வினர் வாக்குகளைப் பெறுவதற்காகப் பிராமணர்களை அவதூறு செய்து வாக்கு பெற அரசியல் செய்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.

Similar News