பிரதமரின் 116 மனதின் குரல் நிகழ்ச்சி:தன் பள்ளி என்சிசி அனுபவத்தை பகிர்ந்த பிரதமர்!
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் அந்த வகையில் இன்று நடைபெற்ற 116 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை அறக்கட்டளை ஒன்றை பாராட்டி பேசியதோடு தன் பள்ளி அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்
அதாவது அடுத்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்த நாளை குறிப்பிட்டு இந்த முறை விவேகானந்தரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று கூறினார் மேலும் ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் வளர்ந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சியில் பல மாநிலம் மாவட்டம் மற்றும் கிராமங்களில் இருந்து 2000 இளைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்
இதனை அடுத்து இன்று தேசிய மாணவர்கள் படை தினம் தேசிய மாணவர்கள் படை என்ற பெயரை கேட்ட உடனே நம் அனைவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வரும் நானும் என் பள்ளி நாட்களில் தேசிய மாணவர்கள் படை உறுப்பினராக இருந்தேன் அதன் மூலம் எனக்கு கிடைத்த அனுபவம் என்பது விலைமதிப்பற்றது என்சிசி இளைஞர்களிடம் ஒழுக்கமும் தலைமை பண்பும், சேவை உணர்வும் அதிகமாக வளர்கிறது என்று கூறினார்.
அதுமட்டுமின்றி பல்லுயிர் பெருக்கங்களில் முக்கிய பங்காற்று வருகின்ற சிட்டுக்குருவி நகரமயமாக்களால் நம்மை விட்டு விலகி விட்டது இதனால் இன்றைய தலைமுறையின் பல குழந்தைகள் சிட்டுக்குருவிகளை படங்களிலும் வீடியோக்களிலும் மட்டுமே பார்க்கிறார்கள் அந்த வகையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரச்சாரங்களையும் நடவடிக்கையும் சென்னையில் கூடுகள் அறக்கட்டளை திறம்பட செய்து வருகிறது
அவர்கள் பள்ளிகளுக்கு சென்று அன்றாட வாழ்வில் சிட்டுக்குருவிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குழந்தைகளுக்கு எடுத்துரைத்து சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்ய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர் என்று பாராட்டி பேசினார்.