மகாராஷ்டிராவில் வெற்றியை தனதாக்கிய பாஜக கூட்டணி:வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

Update: 2024-11-23 14:50 GMT

மகாராஷ்டிரா ஜார்கண்ட் மாநிலங்களின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வாக்குகள் அனைத்தும் இன்று நவம்பர் 23 எண்ணப்பட்டு வருகிற நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 57 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் தலைமையான இண்டி கூட்டணியால் கைப்பற்ற முடிந்தது

மேலும் கடந்த நவம்பர் 13ஆம் தேதி பிஹாரில் காலியாக இருந்த தராரி ராம்கர் இமாம்கன்ஜ் பெலாகன்ஜ் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலின் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது இதனை அடுத்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நவம்பர் 23 எண்ணப்பட்ட நிலையில் அந்த நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பாஜகவின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது

அதுமட்டுமின்றி இந்த இடைத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக அமைப்பாளராக கருதப்படுகின்ற பிரசாந்த் கிஷோர் புதிதாக தொடங்கிய ஜன் சுராஜ் கட்சியும் முதன் முதலாக களம் கண்டது இந்த நான்கு தொகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட பிரச்சாரங்களை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டு பிரதமர் மோடி பிஹாரி வளங்களை குஜராத்திற்கு திரும்புவதாக விமர்சித்தார் இருப்பினும் இத்தேர்தலில் அவரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியையும் சந்தித்துள்ளது

இதனை அடுத்து பிரதம நரேந்திர மோடி வளர்ச்சி வெல்லும் நல்லாட்சி வெற்றி ஒன்றுபட்டால் இன்னும் உயருவோம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு குறிப்பாக மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு என்.டி.ஏ-வுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி இந்த பாசமும் அரவணைப்பும் இணையற்றது மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் 

Tags:    

Similar News