சட்டமன்ற தேர்தலில் இறுதி வாய்ப்புக்காக வாக்குக்குக் கெஞ்சி அழும் திமுக MLA -வைரலாகும் வீடியோ!
ஏப்ரல் 6 இல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் தேர்தல் பிரச்சாரம் இறுதி நாளை எட்டியுள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. வாக்குகளைப் பெற பல்வேறு முயற்சிகளையும் செய்து தற்போது திமுக வேட்பாளர்கள் இறுதியாக மக்களிடம் கெஞ்சுவதில் இறங்கிவிட்டனர்.
அந்த வீடியோவில் விராலிமலை தொகுதியின் திமுக வேட்பாளர் M பழனியப்பன் தேர்தலுக்கு தனக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் தனக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு மக்களிடம் அழுது கெஞ்சுவதைக் காணமுடிந்தது.
அவர் வாக்குக்காகப் பிச்சை எடுப்பதையும் மற்றும் அதற்காக மக்களிடம் கெஞ்சி அழுவதையும் கீழுள்ள வீடியோவில் காண முடிகின்றது.
"நான் இந்த கட்சியில் 30 ஆண்டுகளாக இருந்த போதிலும், எனக்குத் திமுக சார்பாகத் தேர்தலில் போட்டியிட இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளனர். இது எனக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பாக நான் எண்ணுகிறேன். உங்கள் வாக்குகள் மூலம் என்னைக் காப்பாற்றுங்கள். நான் உங்கள் பாதங்களில் பணிகிறேன். இதுவரை என் அரசியல் நாட்களில் எந்த லஞ்சமும் நான் பெறவில்லை. இனியும் பெற மாட்டேன். மக்களுக்குச் சேவை செய்வதே எனது மிகப் பெரிய கடமையாகக் கருதுகிறேன். எனக்கு ஒருமுறை வாய்ப்பளித்து எனக்கு வாக்களியுங்கள்," என்று அவர் அந்த வீடியோவில் கெஞ்சி அழுவதைக் காண முடிந்தது.
இவ்வாறு கூறியவுடன், தனது கழுத்தில் சுற்றியிருந்த திமுக சால்வையை எடுத்து தனது கண்களைத் துடைப்பதைக் காண முடிந்தது. மேலும் தான் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் மற்றும் தற்போது தொகுதியில் காலில் விழுந்து பிச்சை கேட்பதாகவும் தெரிவித்தார்.
2011 ஆம் தேர்தலில் பழனியப்பன் தனியாகப் போட்டியிட்டார் மற்றும் 2016 தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டுமுறையும் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரிடம் அவர் தோல்வி அடைந்தார்.