மமதா பானர்ஜி மீது தாக்குதல் இல்லை - காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அம்பலமான உண்மை! #PK Task

Update: 2021-03-12 01:30 GMT

மேற்குவங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, அதிகளவு கூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்து தான் என தேர்தல் ஆணையத்திற்கு மாநில காவல்துறை அறிக்கை அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் மமதா பானர்ஜி தான் 4, 5 பேரால் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

களேபரத்தில் தன்னை 4 முதல் 5 பேர் தாக்கியதாகவும், கார் கதவை சாத்தியதால் தன்னுடைய காலில் பெரிய காயம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறினார். அந்த சமயம் போலீசார் யாரும் அருகில் இல்லை என்பதால் இது சதிச் செயலாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனிடையே மமதா தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாநில காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


விசாரணையின் அடிப்படையில் முதல்கட்ட அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கண்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஆனால் பாதுகாப்பில் சிறிது கவனக் குறைவு ஏற்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான அறிக்கை முழு விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். தற்போது சிசிடிவி காட்சிகள், கண் கண்ட சாட்சியங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. 

Similar News