2014ல் 6 மட்டும்தான்! 2022ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வு!

Update: 2022-03-13 06:33 GMT

கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆளும் மாநிலங்களாக 6 மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பாஜக ஆளும் மாநிலங்களாக உயர்ந்துள்ளது. பிரதமர் வேட்பாளராக கடந்த 2014ம் ஆண்டு மோடி அறிவிக்கப்பட்டு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் மூலம் நாடு முழுவதும் பாஜகவின் அலை வீசியது. இதனால் அவர் பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்றார். அதன் பின்னர் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையும் வரபோகின்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிகரித்தது.

இந்நிலையில், நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பாஜக ஆளுகின்ற மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலம் வெறும் 2 மட்டுமே உள்ளது. தற்போது உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆட்சியை பிடித்தது.

இதனால் பாஜக ஆளுகின்ற மாநிலங்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. இதுவரையில் அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அசாம், பீகார், ஹரியானா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை பொறுத்தவரையில் மொத்தமாக 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

Source: Dinakaran

Image Courtesy:DNA India

Tags:    

Similar News