திமுகவின் ஊழல் மோசடிகள் குறித்து மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!!

Update: 2026-03-01 16:23 GMT

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரர் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்களிப்பை நினைவுகூர்வதாகக் கூறினார்.


திமுக அரசின் நியாயமற்ற தன்மையைக் குறிப்பிட்ட மோடி, பூரண சந்திரன் என்கிற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்ததை நினைவுகூர்ந்தார். திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மிட்டத்தைக் கொண்டு வரும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.


திமுகவும் காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள் என்று குற்றம் சாட்டிய மோடி, கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றார். மாநிலத்திற்கு நல்லது செய்ய வேண்டிய காலத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றும், ஆனால் இன்று வாய் கிழியப் பேசுகிறார்கள் என்றும் கூறினார்.


திமுகவின் ஊழல்களை அடுக்கிய மோடி, பணியிட மாற்றங்கள் விஷயத்தில் 365 கோடி மோசடி, அரசுப் பணிகள் வாங்கித் தருவதில் 900 கோடி ரூபாய் மோசடி, ஒப்பந்தங்கள் பெறுவதில் 1000 கோடி ரூபாய் மோசடி, மணல் கொள்ளையில் 4200 கோடி ரூபாய் மோசடி, டாஸ்மாக்கில் 40,000 கோடி ரூபாய் மோசடி என்று பல ஊழல்களை சுட்டிக் காட்டினார்.

Tags:    

Similar News