2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாரான பா.ஜ.க.!

Update: 2022-04-29 13:57 GMT

வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் பா.ஜ.க. தற்போது தயாராகியுள்ளது. நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி எதிர்க்கட்சியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம். இந்த தேர்தலை சந்திக்க முதன் முதலாகவே ஆளும் பா.ஜ.க. தயாராகியுள்ளது. பலவீனமாக இருக்கும் தொகுதிகளை கண்டறிந்து அங்கு சிறப்பு குழுவையும் பா.ஜ.க. அமைத்திருக்கிறது.

தேசிய அளவில் பிரசாரக் கூட்டத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டமும் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட மற்ற எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் மத்தியில் பா.ஜ.க. அரசே அமையும் என்ற கருத்துக்கணிப்புகளும் தற்போதிலிருந்தே பேசப்படுகிறது.

Source: Polimer

Image Courtesy: Mint

Tags:    

Similar News