தேர்தல் பணியில் 25 சதவீதம் பெண்கள்.. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி.!

தேர்தல் பணியில் 25 சதவீதம் பெண்கள்.. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி.!

Update: 2020-12-15 19:45 GMT

சென்னை, மதுரவாயல், பூவிருந்தவல்லி மற்றும் மாதவரம் தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி முகவர்களுக்கான தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வருகின்ற தேர்தலில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பெண்கள் 25 சதவீதம் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் நல்லாட்சி தருவோம் என்று கூறாமல் எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவோம் என்று சொல்லி வருகின்றனர். அவர்களே அப்படி கூறும்போது எம்.ஜி.யாரின் தொண்டர்கள் எந்த அளவிற்கு சிறப்பான ஆட்சி செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அதிமுக அரசு மீது முறையான குற்றச்சாட்டு கூற முடியவில்லை. எனவே மற்ற கட்சிகளை இணைத்துக்கொண்டு ஸ்டாலின் எங்கள் மீது பழி சுமத்தி வருகின்றார். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News