3 மாத சபதத்தை முடிவுக்கு கொண்டு வந்த அண்ணாமலை:கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!

Update: 2025-04-12 17:33 GMT
3 மாத சபதத்தை முடிவுக்கு கொண்டு வந்த அண்ணாமலை:கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!

2021 தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்கப்பட்ட அண்ணாமலையில் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தமிழக பாஜக புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார் மேலும் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்கப்பட்டதற்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் அன்பு சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி

தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்!வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி,திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

மேலும் நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்து கடந்த மூன்று மாதங்களாக காலனி அணியாமல் இருந்து வந்த அண்ணாமலைக்கு புதிய காலணியை கொடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை நயினார் நாகேந்திரன் முன்வைக்க அதை அண்ணாமலையும் ஏற்றுக் கொண்டுள்ளார்

முன்னதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார் 

Tags:    

Similar News