பீகாரை போன்று தமிழகத்தில் 5 கட்ட தேர்தலா.? உற்சாகத்தில் அ.தி.மு.க.,! சோகத்தில் தி.மு.க.,!

பீகாரை போன்று தமிழகத்தில் 5 கட்ட தேர்தலா.? உற்சாகத்தில் அ.தி.மு.க.,! சோகத்தில் தி.மு.க.,!

Update: 2020-12-19 12:50 GMT

தமிழகத்தில் இது வரை நடந்த சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாகத்தான் நடைபெற்றுள்ளது. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடக்க வாய்ப்புள்ளதாக மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் பரபரப்பான தகவலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதன் மூலம், மத்தியில் ஆளுகின்ற கட்சி மெகா பிளானுடன் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்க உள்ளதை அறிந்து கொள்ள முடியும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு செய்யவிலை என்றாலும், அடுத்த மாத இறுதியில், அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடக்க வாய்ப்புள்ளதாக மத்தியில் ஆளும்கட்சியின் மாநில பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார். இதுவரை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலைப் போல, இந்த முறை நடக்காது. 5 கட்டமாக அல்லது குறைந்தபட்சம் 3 கட்ட தேர்தல் என்கிற அறிவிப்பினை எதிர்பார்க்கலாம் என்றார்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவில் அதிமுக உள்ளது. இந்த முறையும், அதிமுக வெற்றி பெற்றுவிட்டால், தொடர்ச்சியாக 3வது முறை ஆட்சியை பிடித்த என்ற பெருமை அந்த கட்சிக்கு கிடைத்துவிடும். ஆனால் அதைவிடவும் முக்கியமாக தமிழக சட்டப்பேரவைக்கு இந்த முறை குறைந்தபட்ச எம்.எல்.ஏ.க்கள் உள்ளே சென்றுவிட வேண்டும் என்று பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

அதற்கான காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. இதே ஆட்சி நீடிக்கும்பட்சத்தில், கிட்டத்தட்ட தற்போது உள்ளது போன்று மத்திய அரசுக்கு இணக்கமான அரசாகவே இருக்கும். எனவே அதற்கு சாதகமாக களத்தை அமைத்துக் கொடுக்கவே மத்திய அரசு விரும்பும். திமுக கூட்டணி தேர்தலில் பலத்தை காட்டினாலும், மத்திய அரசு சில சாதகமான சமிக்கைகளை அதிமுகவுக்கு வழங்கும். குறிப்பாக தேர்தலை எளிதாக எதிர்கொள்கின்ற வகையில், 3 முதல் 5 கட்டங்களாக நடத்தினால், ஆளும் அரசுக்கு சாதகமாக அமையும் என்பதுதான் அந்த கணக்கு.

பீகார் மாநிலத்தில், ஆளும்கட்சியாக இருந்த நிதிஷ்குமாருக்கு செல்வாக்கு குறைந்ததை தேர்தலுக்கு முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தேஜஸ்விக்கு சாதகமான அலை உள்ளதை அறிந்துதான், அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. அதன்மூலம் தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் கவலையில்லாமல் ஈடுபட்டனர். இதனால் நிதிஷ்குமார் பின்னடைவை சந்தித்தாலும், பாஜக உதவியுடன் மீண்டும் முதலமைச்சரானார். அப்படியான ஒரு யுக்தியை தமிழத்திலும் செயல்படுத்த வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு ஏதுவாகத்தான் தேர்தல் பல கட்டங்களாக நடத்தும் திட்டமும்.

அப்படி செய்வதன் மூலம் பிரச்சாரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் மிக எளிதாக செல்ல முடியும். தேர்தல் பணிகளை தொய்வின்றி கவனிக்க வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும். இதன் மூலம் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படி செய்யும் பட்சத்தில் மத்திய அரசு திட்டங்களையும் தீவிரமாக பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். 243 தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு, 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 

ஒரே மாநிலத்தில் பல கட்டமாக நடத்திய அனுபவம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இந்த முறை தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் தற்போதைய செய்தியாக உள்ளது. இப்படி நடக்கும்பட்சத்தில் அதிமுக எளிதில் வெற்றிபெறும். கூட்டணி கட்சியினரும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பை எதிர்நோக்கி அதிமுகவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதே சமயத்தில் இப்படி பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றால் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் அந்த கட்சியின் தலைமை மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Similar News