9 மாதம்.. 80 கோடி பேருக்கு இலவச உணவு வழங்கிய மத்திய அரசு.. கமலுக்கு தெரியுமா.. எச்.ராஜா.!
9 மாதம்.. 80 கோடி பேருக்கு இலவச உணவு வழங்கிய மத்திய அரசு.. கமலுக்கு தெரியுமா.. எச்.ராஜா.!
மக்களோடு தொடர்பே இல்லாதவரின் பிதற்றலே என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் கமலுக்கு காட்டமான பதில் அளித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தின் வயது 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், போதிய இடவசதி இல்லாத சூழலை கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை எழுப்புகிறது மத்திய அரசு.
தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே எழுப்பப்படும் இந்த புதிய கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் என்றும், கட்டுமான பணிகள் வருகின்ற 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன், சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் அப்போதைய மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என்று மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று கேட்டிருந்தார்.
இதற்கு பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், பொய் பரப்புவது என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு எந்த எல்லையும் தேவையில்லை.
கடந்த 9 மாதங்களாக 80 கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, கோதுமை, 1 கிலோ பருப்பு இலவசமாக மத்திய அரசு அளித்து வருகிறது. யார் பட்டினி இருக்கிறார்கள். மக்களோடு தொடர்பே இல்லாதவரின் பிதற்றலே இது. இவ்வாறு அவர் கூறினார்.