தி.மு.க.வை காப்பது கிருப.. கிருப.. கோவையில் நடிகை விந்தியா சரவெடி பேச்சு.!

தி.மு.க.வை காப்பது கிருப.. கிருப.. கோவையில் நடிகை விந்தியா சரவெடி பேச்சு.!

Update: 2021-01-04 08:25 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து கோவை, தொண்டாமுத்தூரில் கண்டன பொதுக்குழு கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் கிராம சபைக்கூட்டம் என்ற போர்வையில் திமுக குண்டர்களை வைத்து அப்பாவி பெண்களை சரமாரியாக தாக்கியது அனைவரும் அறிந்ததே. அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, அதிமுக அரசு ஊழலில் உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு பதில் கேள்வி பூங்கொடி என்ற பெண் பேசினார். அதிமுக ஆட்சியில் அப்படி என்ன குறை இருக்கிறது. எனது மாவட்டத்தில் உள்ள அமைச்சரை எதற்காக தவறாக பேசுகிறீர்கள் என கேட்டார். இந்த கிராமத்திற்கு என்ன அடிப்படை வசதி திமுக சார்பில் செய்யப்பட்டது என்பன கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின் அந்த பெண் வேலுமணி அனுப்புன ஆள். எனவே அவரை அப்புறப்படுத்துங்கள் என கூறினார். இதனையடுத்து திமுக குண்டர்கள் சராமாரியாக தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் பேசினார்கள். அந்த பெண் மற்றும் அவருடன் கோயிலுக்கு வந்திருந்த சிலரையும் திமுக குண்டர்கள் தாக்கினார். இதில் அப்பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று இரவு தொண்டாமுத்தூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, அதிமுக கொள்கை பரப்புதுணை செயலாளரும் நடிகையுமான விந்தியா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகை விந்தியா பேசும்போது, திமுக என்றாலே ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். ஸ்டாலின் பொய் பேசுவதற்கு என்றே பிறந்தவர். அவருக்கு பீகாரில் இருந்து ஒருத்தர் எழுதி கொடுப்பதை அப்படியே பேசுவார். அவருக்கென்று சுயமாக சிந்திக்கும் திறன் கிடையாது. அப்பாவி பெண் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாதவர் எப்படி இந்த நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று கேட்டார்.

மேலும், தற்போது வரை திமுகவை காப்பது கிருப கிருப.. என கூறினார். கொட்டும் மழையிலும் அவரது பேச்சை அதிமுக தொண்டர்கள் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News