140 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.!
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறாது என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன.
கரூரில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பாதுகாப்பாக இல்லை என்று திமுகவினர் அட்டகாசம் செய்து வருகின்றனர். மேலும், கன்டெய்னர்களில் இருந்து ஹேக் செய்யும் நிலை உருவாகியுள்ளதாக தமிழகம் முழுவதும் அலப்பறை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கன்டெய்னர் லாரிகள் வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தோல்வி பயத்தில் இது போன்று பேசி வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறாது என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. ஆனால், அதனை பொய்யாக்கி மீண்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த முறையும் அதிமுக வெற்றிபெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். அதிமுக கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.