நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க., பா.ஜ.க., தலைவர்கள் இடப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை!
தமிழத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசில் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளது.
தமிழத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசில் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளது.
அதே போன்று ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியின் உறவு சுமுகமாக உள்ளது. இதனால் மீண்டும் இக்கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடர உள்ளது.
நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள், தமிழகத்தில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக - அஇஅதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் போது ..#NDA #TNBJP @JPNadda @blsanthosh @Murugan_MoS @CTRavi_BJP @ReddySudhakar21 pic.twitter.com/uL0nrPrYG8
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 29, 2022
இந்நிலையில், தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் இடப்பங்கீடு பற்றி அதிகாரப்பூர்வமாக இரண்டு கட்சிகளும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Twiter