ஆபாசமாக பேசும் ராசா பிரச்சாரத்திற்கு தடை.. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்.!
இதனை அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ராசா மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார்.
இதனை அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து புகார் அளித்தார். இது பற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், மீண்டும் நேற்றை பிரச்சாரத்தில் ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் ராசா பேசியுள்ளார்.
எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.