அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி தலைவர் யார்.. 7ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 இடங்களை வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது.

Update: 2021-05-04 03:49 GMT

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 இடங்களை வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில், 16-வது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக இடம் பெறுகிறது. இந்த சூழலில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகின்ற மே 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.


 



இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக, எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக பார்க்கப்படுகிறது.

Similar News