சசிகலாவுடன் தொடர்பு மேலும் 5 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.!
சசிகலாவிடம் தொடர்பில் இருந்ததாக சேலம் புறநகர், சிவங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவிடம் தொடர்பில் இருந்ததாக சேலம் புறநகர், சிவங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது மீண்டும் அதிமுக நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றனர். இவரது பேச்சு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மேலும் 5 நிர்வாகிகளை கட்சி தலைமை நீக்கியுள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஏ. ராமகிருஷ்ணன், ஆர், சரவணன், ஆர். சண்முகப்பிரியா, ராஜகோபால், டி. சுந்தர்ராஜ் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.