அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா பதவிகளை பெறுபவர்கள் யார்?
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக ஜூன் 14ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அதிமுக தலைமை கூட்டியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியை பிடித்தது. எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா பதவிகளுக்கு இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இதனை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்களான வைத்தியலிங்கம் அல்லது நத்தம் விஸ்வநாதன் துணை தலைவராக அதிமுக தேர்ந்தெடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதே போன்று சட்டப்பேரவை கொறடா பொறுப்பை மூத்த உறுப்பினருக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமூக ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி அல்லது கே.பி.அன்பழகன் கொறடாவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.