திருவாரூரில் அ.தி.மு.க. கவுன்சிலர் தலை துண்டித்து படுகொலை.. போலீசார் விசாரணை.!
திருவாரூரில் அ.தி.மு.க. கவுன்சிலர் தலை துண்டித்து படுகொலை.. போலீசார் விசாரணை.!
திருவாரூரில் அதிமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு ஊராட்சி அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் ராஜேஷ். இவர் தலை துண்டித்த நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ராஜேஷின் தலையை ஒரு புறமும், உடல் மற்றொரு புறமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.